வவுனியாவில் கத்திகுத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்
In இலங்கை November 21, 2020 3:44 am GMT 0 Comments 1658 by : Yuganthini

வவுனியா- கற்குளம் 4 பகுதியில், குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா கற்குளம் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய ஆணொருவர், 17 வயதுடைய பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.
இதனையடுத்து குறித்த பெண்ணின் தாயார் இருவரையும் பிரிக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருக்கிறார்.
ஒருவழியாக குறித்த பெண்ணை, தாய் தன்வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிற நிலையில், நேற்று மதியம் அந்த பெண்ணின் வீட்டிற்குற் சென்ற குறித்த நபர், பெண்ணின் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அங்கு இருந்த கத்தி ஒன்றை எடுத்து பெண்ணின் தாயைத் தாக்க முற்படுகையில், குறித்த பெண் இடைமறித்ததால் அந்த பெண்ணையும் தாக்கி பெண்ணின் தாயையும் வெட்டியிருக்கிறார்.
இதேவேளை இதனைத் தடுக்க வந்த பெண்ணின் வயதான பாட்டி ஒருவரையும் வெட்டியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, குறித்த பெண்ணை மட்டும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.