வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்றது புதுவருட விசேட ஆராதனை!
வவுனியாவில் புதுவருட விசேட ஆராதனைகள் இன்று(வெள்ளிக்கிழமை) பூவரசன்குளம் புனித அன்னாள் தேவாலயத்தில் இடம்பெற்றது.
வவுனியாவில் நள்ளிரவு ஆராதனைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் காலை 6.30 மணிக்கு அருட்தந்தை ரெஜினோல்டினால் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.
இதன்போது குறைந்தளவிலான கிறிஸ்தவர்களே தேவாலயத்தினுள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை வவுனியாவில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.