வவுனியாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்
In இலங்கை January 11, 2021 4:35 am GMT 0 Comments 1612 by : Dhackshala

வவுனியா அரச முறிப்பில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், காயங்களுடன், ஆணொருவர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற சண்டையின்போது அங்கு வந்த குறித்த பெண்ணின் சித்தப்பாவினால் குறித்த பெண்ணின் கணவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, குறித்த நபர் மீது விறகு கட்டையினாலும் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக அக்கிராம மக்களினால் ஒமந்தை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், குற்றத்திற்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவத்தில் காயமடைந்த 29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவர் வவுனியா வைத்தியாசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.