வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு இராணுவத்தால் முன்னெடுப்பு
In இலங்கை December 29, 2020 8:03 am GMT 0 Comments 1260 by : Yuganthini
வவுனியாவில் இராணுவத்தினரால் தொற்று நீக்கும் செயற்பாடு பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கொரொனோ வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் இராணுவம், பொலிஸார், நகரசபை மற்றும் சுகாதார பிரிவினரின் பங்குபற்றுதலில் வவுனியா மாவட்டத்தின் முக்கிய பகுதிகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், பாடசாலைகள், பேருந்து நிலையங்கள் என்பன இன்று (செவ்வாய்க்கிழமை) தொற்று நீக்கப்பட்டது.
இதன்போது நகரசபையின் தீயணைப்பு வாகனங்களால் பொது இடங்கள் நீர்பாய்ச்சி தூய்மையாக்கப்பட்டிருந்ததுடன் தொற்றுநீக்கி மருந்துகள் விசிறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நகரசபை பொதுசுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றுவரும், இந்த செயற்பாட்டில் அதிகளவான இராணுவத்தினர் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.