வவுனியாவில் நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் அனைத்தும் நிறுத்தம்!
In இலங்கை December 22, 2020 8:40 am GMT 0 Comments 1355 by : Yuganthini

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நத்தார் நள்ளிரவுத்திருப்பலிகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயரினால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயரினால் அனைத்து ஆலய பங்குச்சபைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக, கடந்த ஞாயிறு திருப்பலியின் பின்னர் வவுனியா ஆலய மக்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளது .
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகவும் குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலைகளிலும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு உதவி செய்யவும் அவர்களுக்காக பிரார்த்திக்கும் நோக்குடன் இவ்வருடத்தில் களியாட்ட நிகழ்வுகள் கரோல், ஒளிவிழா என்பனவும் கிறிஸ்மஸ் நத்தார் நள்ளிரவுத்திருப்பலிகள் என்பன ஆயரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நத்தார் தினத்தன்று காலை 7.30 மணிக்கு திருப்பலி, சமூக இடைவெளிகளையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் ஆலயங்களில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.