வவுனியாவில் நாளை முதல் பாடசாலைகள் திறப்பு
In இலங்கை December 20, 2020 4:34 am GMT 0 Comments 1534 by : Dhackshala

வவுனியாவில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் செயற்படும் என வலய கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்
வவுனியாவில் கொரனா தொற்றுடன் மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திற்கு உட்பட்ட 5 பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் நாளை முதல் பாடசாலைகளைத் திறந்து கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.