வவுனியாவில் விபத்து: வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர் உயிரிழப்பு
In இலங்கை December 18, 2020 4:19 am GMT 0 Comments 1550 by : Yuganthini

வவுனியா- சைவப்பிரகாச மகளீர் வித்தியாலத்திற்கு அருகில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஒருவர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (வியாழக்கிழமை) அவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பாடசாலையில் கல்விகற்கும் தனது மகளை ஏற்றிசெல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரை, பட்டா ரக வாகனம் மோதியதில், அவர் படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் வவுனியா ஓயார்சின்னக்குளத்தை சேர்ந்த க.சிறிஸ்கந்தராயா (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.