வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல் மீட்பு
In இலங்கை December 22, 2020 10:46 am GMT 0 Comments 1489 by : Yuganthini

வவுனியா- ஓமந்தை, அரசமுறிப்பு பகுதியிலுள்ள வயல் காணியில், மோட்டார் செல் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, ஓமந்தை- அரசமுறிப்பு பகுதியிலுள்ள வயல் காணியில், வெடிபொருள் இருப்பது தொடர்பாக இலங்கை புலனாய்வு சேவைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குறித்த பகுதியை சோதனையிட்டநிலையில், மோட்டார் செல் ஒன்றினை மீட்டுள்ளனர்
இந்நிலையில், நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த மோட்டார் செல் செயலிழக்கச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.