வவுனியா நகரசபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்
In இலங்கை November 19, 2020 4:54 am GMT 0 Comments 1456 by : Dhackshala

வவுனியா நகரசபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றது.
இதன்போது எதிர்வரும் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வரவுசெலவுத் திட்டத்தினை ஐக்கியத் தேசியக் கட்சியின் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) உறுப்பினர் எம்.லறீப் முன்மொழிய சுதந்திரக்கட்சி உறுப்பினரான ஜ.கனிஸ்டன் வழிமொழிந்திருந்தார்.
தமிழர் விடுதலை கூட்டணி வசம் இருக்கும் வவுனியா நகரசபையின் வரவுசெலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.