வவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
In இலங்கை January 25, 2021 6:57 am GMT 0 Comments 1452 by : Yuganthini
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், இன்று (திங்கட்கிழமை) தளர்த்தப்பட்டுள்ளது.
வவுனியா- பட்டாணிசூரை சேர்ந்த கர்பிணி பெண் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த கிராமம் முடக்கப்பட்டது.
மேலும் வவுனியா நகரப் பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்துவந்த நிலையில், பிரதான நகரம் உட்பட்ட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டு, முடக்கப்பட்ட நிலையில் கடந்த 18ம் திகதி வவுனியா நகர மத்தி தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் மில் வீதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், வவுனியா மொத்த வியாபார நிலையம் மூடப்பட்டுள்ளது.
மேலும், வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் அன்டிஜன் பரிசோதனை செய்யப்படாத பெருமளவான வர்த்தக நிலையங்கள், சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.