வவுனியா பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு
In இலங்கை January 31, 2021 10:47 am GMT 0 Comments 1495 by : Yuganthini
வவுனியா பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு, வவுனியா நகர மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்று வருகின்றது.
குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதம விருந்தினருக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்று வைபவமும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயரத்தின கேரத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமதிபால, வவுனியா நகரசபை உப.தலைவர் குமாரசாமி, தெற்கு சிங்கள பிரதேச சபை உப.தலைவர் வசந்த ராஜகருனா, விளையாட்டு துறை அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பாலித்த மற்றும் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.