வவுனியா வளாகம் மீண்டும் ஆரம்பம் – மாணவர்களுக்கும் அறிவுறுத்து

யாழ். பல்கலைழக வவுனியா வளாகத்தின் கல்விசெயற்பாடுகள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கபடும் என்று வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் தெரிவித்த அவர்,
“நாட்டின் தென் பகுதியிலும், கிழக்கு மாகாணத்திலும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வவுனியா வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தபட்டிருந்தன.
இந்நிலையில் எதிர்வரும் வாரம் வளாகத்தின் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதற்கமைய வியாபாரக் கற்கைகள் பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கபடவுள்ளதுடன் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் 7 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அத்துடன் விடுதிகளில் தங்கியுள்ள வியாபாரக் கற்கைகள் பீடத்தின் மாணவர்கள் வரும் 5ஆம் திகதி காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணிக்குள்ளும், பிரயோக விஞ்ஞான பீடத்தின் மாணவர்கள் வரும் 6 ஆம் திகதி காலை 9 பணியிலிருந்து மாலை 3 மணி வரைக்குள்ளும் விடுதிகளுக்குள் அனுமதிக்கபடுவர். அத்துடன் மாணவர்கள் எடுத்துவரும் பொதிகளும் பாதுகாப்பு பிரிவினரால் சோதனைக்கு உள்ளாக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.