தமிழகத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு!
In இந்தியா April 18, 2019 3:54 am GMT 0 Comments 2217 by : Krushnamoorthy Dushanthini

தமிழகத்தின் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில், அரசியல் தலைவர்களும் தமது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தமிழக பா.ஜ.க. தலைவரும், தூத்துக்குடி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், சிவகங்கை மாவட்டம் கண்டனூர் பெத்தாள் ஆச்சி பாடசாலையில் தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் தான் விரும்பும் மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு அமைவதற்காக வாக்களித்ததாக தெரிவித்தார். சுயமரியாதை, பகுத்தறிவு, ஜனநாயகம், சுதந்திரம், எம்மதமும் சம்மதம், சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம். இவற்றை காப்பாற்றுவதற்காக வாக்களிக்க வேண்டும் என தமிழக மக்களை கேட்டுக்கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கும் கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கும் மகாராஷ்டிராவில் 10 தொகுதிகளுக்கும் என மொத்தம் 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.