வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுப்பதே சவாலாக இருந்தது: சத்யபிரத சாஹு
In இந்தியா April 20, 2019 3:45 am GMT 0 Comments 2042 by : Yuganthini

தமிழகத்தில் நிறைவடைந்துள்ள மக்களவைத் தேர்தலில், வாக்குக்காக பணம் கொடுப்பதைத் தடுப்பதே பெரும் சவாலாக இருந்ததென மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
நிறைவுபெற்றுள்ள மக்களவை தேர்தல் குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சத்யபிரத சாஹு இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கூறியுள்ளதாவது,
குறித்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும், அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலர்களின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. இப்பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3இலட்சத்து 50ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் தேர்தலின்போது சில இடங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. ஆனாலும் உடனடியாக மாற்று இயந்திரங்களைக் கொண்டு சரி செய்யப்பட்டது.
இதேவேளை பிற மாநிலங்களைப் போன்று தமிழகத்தில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றுதல் போன்ற மோசமான சம்பவங்கள் இடம்பெறவில்லை. ஆனாலும் பணபலம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. மக்களும் தங்களது வாக்குக்காக பணம் வாங்க விரும்புகின்றனர்.
அதேபோன்று அரசியல் கட்சிகளும் வாக்குக்காக பணம் தரத் தயாராக உள்ளன. அதைத் தடுப்பதுதான் இந்தத் தேர்தலில் மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இந்நிலையில் பண விநியோகத்தைத் தடுக்க வருமானவரித் துறையும் ஒன்றிணைந்துசெயற்பட்டன” என சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.