வால்மார்ட் முழுநேர ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை!

தொற்றுநோய் காலங்களில் முழுவதும் பணியாற்றிய வால்மார்ட் முழுநேர ஊழியர்களுக்கு, கூடுதலாக 250 அமெரிக்க டொலர்கள் வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 11ஆம் திகதி இந்த தொகை வழங்கப்படும்.
கூடுதலாக, பகுதிநேர தொழிலாளர்கள் 150 அமெரிக்க டொலர்கள் பெறுவார்கள். மேலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் ஊக்கத் தொகை கிடைக்கும்.
கிறிஸ்மஸ்க்கு முன்னர் 85,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூடுதல் பணத்தைப் பெறுவார்கள் என்று வால்மார்ட் கனடா குறிப்பிடுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், நிறுவனம் தனது முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்களுக்கு முறையே 200 மற்றும் 100 அமெரிக்க டொலர்கள் மார்ச் பாராட்டு ஊக்கத் தொகையைச் செலுத்தியது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 2 டொலர்கள் கூடுதலாகப் பெற்றனர். தொற்றுநோயின் ஆரம்பத்தில் லோப்லாஸ் மற்றும் சோபீஸ் இதே போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தின. ஆனால் இரண்டு திட்டங்களும் இறுதியில் முடிவுக்கு வந்தன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.