வாழைச்சேனையில் குடும்பஸ்தரின் சடலம் வீதியோரத்தில் கண்டெடுப்பு!
In இலங்கை January 20, 2021 8:46 am GMT 0 Comments 1405 by : Yuganthini
வாழைச்சேனை- கறுவாக்கேணி குறுக்கு வீதியோரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை கறுவாக்கேணி பிரதான வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான வேலாயுதப்பிள்ளை தங்கராசா (வயது 59) என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் தனது கறுவாக்கேணி பாரதி வீதியிலுள்ள வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் தேடிச் சென்று பார்த்தபோது, வீதியோரத்தில் விழுந்த நிலையில் சடலமாக காணப்பட்டதையடுத்து, வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.