விசமிகளால் சேதமாக்கப்பட்டது கண்டலடி மாவீரர்துயிலும் இல்லம்: இரா.சாணக்கியன் கண்டனம்!
In இலங்கை November 30, 2020 9:45 am GMT 0 Comments 1417 by : Yuganthini

கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டுள்ளமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
கார்த்திகை தீபத்திருநாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை), இனம் தெரியாத விசமிகளினால் வாகரை- கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு இன்றைய தினம் சென்ற இரா.சாணக்கியன், விசமிகளினால் சேதமாக்கப்பட்டிருந்த கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தினை பார்வையிட்டிருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறான செயற்பாடுகள் எம் உரிமை மற்றும் உணர்வுகளை ஒடுக்குவதாக அமையாது. மென்மேலும் தூண்டுவதாக அமைகின்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.