விடுதலைப்புலிகளை குற்றவாளியாக சித்திரிக்க OMP அலுவலகம் முயற்சி – ஐங்கரநேசன்
In இலங்கை April 18, 2019 5:19 am GMT 0 Comments 2497 by : Dhackshala
காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படமானது, விடுதலைப் புலிகளை குற்றவாளியாகக் காண்பித்துள்ளதாக வட. மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.
யாழில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த குறும்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அது விடுதலைப்புலிகளை விமர்சிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. விடுதலைப்புலிகள் என்ற வார்த்தைகள் அந்த குறும்படத்தில் இடம்பெற்றிருக்காவிட்டாலும்கூட, விடுதலைப்புலிகளே காணாமலாக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு எனும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காணாமல்போனோர் அலுவலகம் மக்கள் மனதில் விடுதலைப்புலிகளை தவறாக சித்திரிக்கும் நோக்கில் செயற்படுகின்றது.
அரசாங்கத்தின் படைகளையும் நீதிகோரி போராடும் ஒரு அமைப்பையும் ஒரே தராசில் வைத்துப்பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை
-
கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா
-
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு
-
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச
-
ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La
-
தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள
-
நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்
-
இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்