விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்
In இலங்கை January 25, 2021 11:48 am GMT 0 Comments 1484 by : Jeyachandran Vithushan

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
Onlineexams.gov.lk என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பங்களைப் பெறலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடர்புடைய விண்ணப்பங்கள் ஒன்லைனில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அதன் பிரதியை அதிபரின் பரிந்துரையுடன் பதிவு செய்யப்பட்ட தபால் வழியாக பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த விண்ணப்பத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 0112-785-633, 0112-785-662 அல்லது 0112-785-216 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.