விபத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த நபர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு
In இலங்கை April 1, 2019 10:14 am GMT 0 Comments 3133 by : Dhackshala
மஸ்கெலியாவில் விபத்திலிருந்து தன்னை பாதுகாக்க முற்பட்ட ஒருவர், பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில், டிக்கோயா கிளங்கன் பகுதியைச் சேர்ந்த டி.எம்.ரம்பண்டா (வயது 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹட்டன் பிரதேசத்திலிருந்து மஸ்கெலியாவை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வளைவு பகுதியில் செல்லும்போது குடைசாய்ந்துள்ளது. இதன்போது அவ்விடத்தில் சென்றுக்கொண்டிருந்த குறித்த நபர் குடைசாய்ந்த முச்சக்கரவண்டி தன்னை மோதிவிடுமோ என பயத்தில் வீதியை விட்டு ஒதுங்கியபோதே பள்ளத்தில் வீழ்ந்துள்ளார்.
இவரை மீட்க முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் முயற்சித்தபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதணைக்காக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மேலும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக முச்சக்கரவண்டியின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்