விமானப் போக்குவரத்து விரைவில் வழமைக்கு திரும்பும் – ஹர்தீப் சிங் புரி
In இந்தியா November 17, 2020 6:35 am GMT 0 Comments 1355 by : Krushnamoorthy Dushanthini

இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “கொரோனா பரவலை தடுக்க கடந்த மாா்ச் மாதம் நாடு தழுவிய பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. இதனால் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
2 மாதங்கள் கழித்து கடந்த மே 25-ஆம் திகதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. விமானப் போக்குவரத்து தொடங்கி 2 நாட்கள் கழித்து ஒரே நாளில் 30 ஆயிரத்து போ் விமானங்களில் பயணித்தனா்.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக 2.25 இலட்சம் பயணிகள் விமானங்களில் பயணித்தனா். இதன் மூலம் விமானப் போக்குவரத்து படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. வரும் டிசம்பா் மாத இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விமானப் போக்குவரத்து முற்றிலும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறேன்.
எனினும் அதற்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.