வியன்னாவில் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு என சந்தேகிக்கப்படும் 60 இடங்களில் சோதனை!

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுடன் தொடர்பை பேணியதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள், பல்வேறு அமைப்பு நிறுவனங்களில் பொலிஸ் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளிலேயே நேற்று (திங்கட்கிழமை) சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சோதனைக்கும், வியன்னாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 70 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு என சந்தேகிக்கப்படும் அலுவலகங்கள், குடியிருப்புகள் என 60 இடங்களில் சோதனை நடந்தது.
33 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல், பண மோசடி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிh என்ற சந்தேகத்தில் கண்காணித்து வருகிறோம். இவர்களிடம் ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.
ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் சமீபத்தில் துப்பாக்கி ஏந்திய ஜிகாதிகள் நடத்திய தாக்குதலில் 4பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
இந்த தாக்குதலை நடத்தியது 20 வயதான குஜ்திம் ஃபெஜ்ஸுலை என அடையாளம் காணப்பட்டது, அவர் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.