விளக்கீட்டிலும் தீபம் ஏற்றத் தடை- யாழ். பல்கலை மாணவன் கைது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்திருந்தனர்.
இந்நிலையில், அதனையும் மீறி பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய வாயிலில் தீபம் ஏற்றிய மாணவன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவனான மசகையா தர்ஷிகன் என்பவரே கைது செய்யப்பட்டதுடன், கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை ஆறு மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.
இதனைறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்குச் சென்று தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்ததுடன் அறிவுறுத்தலை மீறினால் கைதுசெய்யப்படுவீர்கள் என பொலிஸார் எச்சரித்திருந்தனர்
இந்நிலையில், நீண்ட இழுபறியின் பின்னர் இரவு 7.45 மணியளவில் பொலிஸாரின் தடைகளை மீறி பல்கலை வாயிலில் விளக்கேற்ற முற்பட்டபோது குறித்த மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்நிலையில், பதவியேற்
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா