விவசாயிகளின் போராட்டம் இந்தியாவின் உள்விவகாரம் சார்ந்தது – பிரித்தானியா
In இந்தியா December 17, 2020 5:11 am GMT 0 Comments 1354 by : Krushnamoorthy Dushanthini

விவசாயிகளின் போராட்டம் இந்தியாவின் உள்விவகாரம் சார்ந்தது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
விவசாயிகள் பிரச்சினைக்கு பிரித்தானிய அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்த பிரச்சினையில் தலையிட வேண்டாம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்தே பிரித்தானியா மேற்படி கூறியுள்ளது.
இதனிடையே பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தியா வரவுள்ளார். இதனையொட்டி பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டொமினிக் ராப் (Dominic Raab) இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
இவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது விவசாயிகள் போராட்டம், இந்தோ பசிபிக் கூட்டுறவு, கொரோனா தடுப்பூசி விநியோகம், மல்லயாவை இந்தியா அழைத்து வருவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் அமைதியான போராட்டங்களுக்கு பாரம்பரியமான மரபு இருப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன், நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.