விவசாயிகளின் போராட்டம் : இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!
In இந்தியா January 4, 2021 5:24 am GMT 0 Comments 1334 by : Krushnamoorthy Dushanthini

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்படி ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பேச்சுவார்த்தை குறித்து பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயித் கூறுகையில் “இன்று பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன. அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகளை புரிந்துகொள்ள வேண்டும்.
சட்டங்கள் இரத்து செய்யப்படுவதைத் தவிர வேறு எந்த தீர்வையும் விவசாயிகள் பரிசீலனை செய்ய மாட்டார்கள். சுவாமிநாதன் அறிக்கையை அரசு அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்’” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.