வெனிசுவேலாவின் இயற்கை வளங்களை அமெரிக்கா சூறையாட நினைக்கிறது – மதுரோ குற்றச்சாட்டு

வெனிசுவேலாவின் இயற்கை வளங்களை அமெரிக்கா சூறையாட நினைக்கிறது என வெனிவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு வெனிசுவேலா நாட்டின் எண்ணெய், இயற்கை வளங்களான தங்கம், எரிவாயு, வைரங்கள் மற்றும் பிற பொருட்கள் தேவை.
டொனால்ட் ட்ரம்புக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவரது முட்டாள் தனத்தினை வெளிப்படுத்த அனைத்து வகையிலும் நான் செயற்பட்டுவருகிறேன். வெனிசுவேலா நாட்டின் இயற்கை வளங்கள் மீது அமெரிக்கா ஆசை கொள்கிறது. வெனிசூலா ஒருபொழுதும் அதனை விட்டு கொடுக்காது.
வெனிசுவேலா போரில் ஈடுபடாது. நாட்டுக்குள் இராணுவத் தலையீடு இருக்காது. ஆனால், இவற்றை வைத்து எங்கள் நாட்டைக் காக்க நாங்கள் தயாராக இல்லை என பொருள்படாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெனிவேலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் ஹைடோ, மதுரோவின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு வீதிகளில் இறங்கிப் போராடும்படி பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரை வலியுறுத்தினார்.
இதையடுத்து, மக்களுக்கும், அரசியல் அமைப்புக்கும் மற்றும் நாட்டுக்கும் முழு விசுவாசமுடன் இருக்கும்படி மதுரோ இராணுவத்தினரை வலியுறுத்தினார்.
இந்நிலையில், வெனிவேலா அதிபரின் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி வன்முறையாக உருவெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.