வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிகளின் போராட்டம் நிறைவுக்கு வந்தது!

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிகளால் மேற்கொள்ளப்பட்டுவந்த போரட்டம் இன்று (வியாழக்கிழமை) நிறைவடைந்துள்ளது.
வழக்கு விசாரணைகளை விரைவுப்படுத்துமாறு கோரி நேற்று மாலை முதல் 20இற்கும் மேற்பட்ட கைதிகள் சிறைச்சாலையின் கூரையின் மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், கைதிகளின் கோரிக்கைகளைக் கடிதம் மூலம் பொறுப்பேற்று ஆராய்வதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே அறிவித்தமைக்கு அமைய கைதிகள் தமது ஆர்பாட்டத்தை நிறைவு செய்துக்கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் துசார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுகுள்ளானவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.