நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
In ஆசிரியர் தெரிவு December 24, 2020 2:45 am GMT 0 Comments 1513 by : Dhackshala

வெல்லம்பிட்டி ‘லக்சந்த செவன’ குடியிருப்பு தொகுதி இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
கொரோனா அச்சம் காரணமாக இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம் முடக்கப்பட்டிருந்த லக்சந்த செவன குடியிருப்பில் வாழும் மக்கள் தமது பிரதேசத்தை விரைவில் விடுவிக்குமாறு கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலன்னாவை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் ஒன்றுகூடிய இவர்கள் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, வண்ணாத்தமுல்லை – அலகஹகும்புற மக்களும் தமது பிரதேசத்தை முடக்கலில் இருந்து விடுவிக்குமாறு கோரி நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலை அபயபுரம் கிராமசேவகர் பிரிவும் முருகாபுரி கிராம சேவகர் பிரிவும் இன்று காலைமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.