வெளிநாடுகளில் இருந்து மேலும் 832 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்
In இலங்கை February 17, 2021 4:23 am GMT 0 Comments 1273 by : Dhackshala

வெளிநாடுகளில் இருந்து மேலும் 832 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்
அதன்படி இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 10 விமானங்களின் மூலமாக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவர்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் டுபாய் ஆகியவற்றுக்கு வேலைக்காகச் சென்ற 389 இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்தின் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும் டுபாயிலிருந்து 97 பேரும் கட்டாரின் தோஹாவிலிருந்து 79 பேரும் சிங்கப்பூரிலிருந்து 45 பேரும் நாட்டை வந்தடைந்தடைந்துள்ளனர்.
நாட்டை வந்தடைந்த இவர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை இக்காலக் கட்டத்தில் 14 விமானங்களின் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 645 பயணிகள் நாட்டைவிட்டு புறப்பட்டும் உள்ளனர்.
இதன்படி குறித்த காலப்பகுதியில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 24 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலமாக மொத்தம் ஆயிரத்து 477 பயணிகள் தமக்கான சேவைகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.