வெளியுறவு மற்றும் வெகுஜன ஊடகங்கள் அமைச்சின் செலவுத் திட்டங்கள் நிறைவேற்றம்!

வெளியுறவு மற்றும் வெகுஜன ஊடகங்கள் அமைச்சின் செலவுத் திட்டங்கள் இன்று நாடாளுமன்றில் பல திருத்தங்களுடன் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
வரவு செலவுத் திட்ட வாசிப்பு குறித்த மூன்றாம் நாள் குழுநிலை விவாதத்தின்போதே இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த ஐந்து வருடங்களில் 500 ஊடகவியலாளர்களுக்கு தொழில் இல்லாமல் போயுள்ளதாகவும், அவர்களில் அதிகமானவர்களுக்கு நஷ்டஈடும் கிடைக்கப் பெறவில்லை எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மக்கார் இன்றைய விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா காரணமாக ஊடகவியலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊடகத்துறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் சுயாதீன ஊடகவியலாளர்களாகும் என்பதால் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பான சேவையை கருத்திற்கொண்டு அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியின் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல்
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப