வெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு – 6 குழந்தைகளைக் காணவில்லை

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் திருமணத்துக்கு சென்றவர்களை ஏற்றிவந்த வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் இரு குழந்தைகள், ஆறு பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் சில நாட்களாக கனமழைபெய்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள வசிரிஸ்தான் மாவட்டத்தில் சிலர் ஒரு வாகனத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றனர்.
வானா என்ற இடத்தின் வழியாக சென்றபோது சாலையின் குறுக்கே பாய்ந்த வெள்ளத்தில் அந்த வாகனம் அடித்துச்செல்லப்பட்டது.
அருகாமையில் உள்ளவர்கள் வழங்கிய தகவலையடுத்து விரைந்து வந்த மீட்புப் படையினர் தீவிரமாக செயற்பட்ட போதும் இரு குழந்தைகள் மற்றும் ஆறு பெண்கள் உயிரிழந்தனர். இதனிடையே காணாமற்போன 6 குழந்தைகளை மீட்பதற்கான தேடுதல் நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்கொரியாவில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த 245 பேர் நாடு திரும்பியுள்ள
-
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கக் க
-
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எத
-
கொரோனாவுக்கு எதிரான ஒளடத பாணியை தாம் கூறியவாறு பருகியிருந்தால், ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாது
-
சம்பள உயர்வு விடயத்தில் தோட்டக்கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்படமுடியாது என அமைச்சரும் அமைச்சரவைப் பே
-
கடந்த 25 வருட காலத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசமிருந்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின்
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்று (புதன்கிழமை) முதல் இந்தியா ஏற்றுமதி செய்யவுள்
-
தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங்கை இதுவரை வழங்கவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று