வேட்பு மனுத்தாக்கல் – அமைச்சர் ஸ்மிருதி இரானி சிறப்பு பூஜை!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் இன்று(வியாழக்கிழமை) தனது கணவருடன் சிறப்பு பூஜையில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
கடந்த 2014 ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டார் ஸ்மிருதி. ராகுல் காந்தியிடம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பின்னர் ராஜ்யசபா எம்.பியான அவர், மத்திய அமைச்சர் ஆனார்.
இந்தநிலையில் தற்போது அவர் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு ஐந்தாம் கட்டமாக, மே 6ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து வரும் 17ஆம் திகதி அங்கு வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார் ஸ்மிருதி. ஆனால், அன்று மகாவீர் ஜெயந்தி என்பதால் விடுமுறை. இதையடுத்து அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தார்.
அதற்கு முன்னதாக, இன்று காலை தனது கணவர் ஜூபின் இரானியுடன் சிறப்பு பூஜையில் ஈடுபட்டுள்ளார். பின் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.