வேலூர் தேர்தல் குறித்து தேர்தல் அலுவலகமே தீர்மானிக்கும் – சத்யபிரதா
In இந்தியா April 1, 2019 9:18 am GMT 0 Comments 2946 by : Krushnamoorthy Dushanthini

வேலூரில் தேர்தல் இரத்து செய்யப்படுமா என்பது தொடர்பில் தேர்தல் அலுவலகமே தீர்மானிக்கும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
வேலூரில் துரைமுருகன் மகனின் வீட்டில் இடம்பெற்ற வருமான வரி சோதனை தொடர்பாக தமிழக தேர்தல் தலைமைச்செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “தமிழகத்தில் இதுவரை ரூ.78.12 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 328 கிலோ தங்கம், 409 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூரில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் .
இதேவேளை வேலூரில் ஆதாரம், ஆவணங்கள் அடிப்படையிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்தியது. வருமான வரித்துறை அளிக்கும் அறிக்கை, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும். சோதனையின் முடிவில் கட்சியின் வேட்பாளருக்கு தொடர்பு இருந்தால், தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வாரணாசியில் வீதியோரக் கடை உரிமையாளரோடு அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
முதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நே
-
தொழிலாளர் ஏற்றுமதி நாடுகளான இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் ஏனைய இடங்களில் இருந்து புதிதாக ஆட்
-
35 ஆண்டுகளாக உகண்டாவில் ஆட்சியில் இருந்த 76 வயதுடைய யோவரி முசவேனி ஆறாவது முறையாக ஜனாதிபதியாக மீண்டும
-
சீனாவுடனான எல்லை மோதலில் இந்திய இராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என பாதுகாப்புத்துறை அமைச்ச
-
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று(சனிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம்
-
கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொ
-
ராஜஸ்தான் மாநிலத்தில் மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேர் உயிரி
-
கிளிநொச்சி- முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்த