வேல்ஸிலும் காலநிலைமாற்றம் தொடர்பான அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது!
In இங்கிலாந்து April 29, 2019 4:50 pm GMT 0 Comments 2419 by : shiyani

காலநிலைமாற்றம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து வேல்ஸில் காலநிலை மாற்றம் தொடர்பான அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தில் காலநிலைமாற்றம் தொடர்பான அவசரநிலை ஸ்கொட்டிஷ் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜனால் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வேல்ஸ் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
வேல்ஸ் அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் மற்றைய அரசாங்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையுமென தாம் நம்புவதாக வேல்ஸ் சுற்றுச்சூழல், எரிசக்தி மற்றும் கிராம அலுவல்கள் அமைச்சர் லெஸ்லி க்ரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் வேல்ஸின் சுகாதாரம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் இயற்கைச்சூழலை காலநிலைமாற்றம் அச்சுறுத்துவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் எக்ஸ்ட்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தே ஸ்கொட்டிஷ் மற்றும் வேல்ஸ் நாடாளுமன்றங்கள் இத்தீர்மானத்தை வெளியிட்டுள்ளன.
தேசிய காலநிலைமாற்றம் தொடர்பான அவசரநிலையை பிரகடனப்படுத்துமாறு இங்கிலாந்து அரசாங்கத்துக்கு தொழிற்கட்சி புதன்கிழமையன்று அழுத்தம் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.