வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை!
In இந்தியா January 13, 2021 4:00 am GMT 0 Comments 1366 by : Krushnamoorthy Dushanthini

வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு தொடரும் என்றும் கூறியுள்ள உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் ஒரு சிறப்பு குழுவினை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தாலும் வேளாண் சட்டங்கள் முழுமையாக மத்திய அரசால் இரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 50 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை மறுத்து வருகிறது.
மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள் பல ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.