வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய பின் குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படவில்லை -பிரதமர் மோடி
In இந்தியா February 10, 2021 1:42 pm GMT 0 Comments 1193 by : Jeyachandran Vithushan

வேளாண் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட பின்னர் குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவையில், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய போதே பிரதமர் மோடி இதனை தெரிவித்தார்.
விவசாயிகள் மீது கொண்ட மதிப்பின் காரணமாகவே, வேளாண் சட்டங்களை எதிர்க்கும் அவர்களுடன் மூத்த மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அத்தோடு வேளாண் சட்டங்களால், சிறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகளும், நகரங்களில் விளைபொருட்களை விற்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.