வேளாண் சட்டங்கள் : கையெழுத்திட்ட பிரதிகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
In இந்தியா December 23, 2020 11:29 am GMT 0 Comments 1427 by : Krushnamoorthy Dushanthini

மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தங்களை இரத்து செய்ய வலியுறுத்தி இரண்டு கோடி விவசாயிகள் கையெழுத்திட்ட பிரதிகள் நாளை (வியாழக்கிழமை) ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தங்களை இரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நாளை சந்திக்க உள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவிக்கையில், “மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய பிரசாரத்தை செப்டம்பர் மாதம் துவங்கினோம்.
கடந்த மூன்று மாதங்கள் நடந்த பிரசாரத்தில் வேளாண் சட்டங்களை இரத்து செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் பண்ணை தொழிலாளர்கள் என இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று உள்ளோம்.
ராகுல் தலைமையில் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து விவசாயிகள் கையெழுத்திட்ட பிரதிகளை வழங்க உள்ளோம். கடுமையான புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் ஆதரவு இருப்பது போல் போலி கணக்கெடுப்புகளை அரசு வெளியிடுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.