வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் புதிய சட்டமூலங்கள் – ராகுல் காந்தி
In இந்தியா January 19, 2021 11:34 am GMT 0 Comments 1321 by : Krushnamoorthy Dushanthini

வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “புதிய வேளாண் சட்டங்கள் வேளாண் துறை முழுவதையும் 3 முதல் 4 முதலாளிகளின் வசம் ஒப்படைக்கிறது.
வேளாண் துறையை அழிப்பதற்கான நோக்கத்திலேயே வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நூறு சதவிகிதம் நான் விவசாயிகளை ஆதரிக்கிறேன்.
நமக்காக போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்தியாவை சீனா பல முறை சோதித்து பார்த்துள்ளது. சீனாவுக்கு உரிய பதிலடி தராவிட்டால் அதன் அத்துமீறல்கள் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.