வைத்தியசாலையிலிருந்து தப்பிக்க முயன்ற கொரோனா நோயாளி கைது
In இலங்கை November 23, 2020 3:45 am GMT 0 Comments 1400 by : Dhackshala

கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து தப்பிக்க முயன்ற கொரோனா நோயாளி ஒருவர் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேலும் இவ்வாறு தப்பிச் செல்ல முயன்றவர் 22 வயதுடைய தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.