ஷானி அபேசேகரவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஏழாம் திகதி வரை அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஷானி அபேசேகரவுக்கு பிணையளிப்பதா இல்லையா என எதிர்வரும் ஏழாம் திகதி தீர்ப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஷானி அபேசேகர, உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரின் பிணை மனுக்கள், கம்பஹா மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்த போதே நீதிபதி நிமல் ரணவீர இதனை அறிவித்தார்.
கடந்த நான்கு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷானி அபேசேகர மற்றும் சுதத் மெண்டிஸ் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள ஆகியோரும் சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன ஆகியோரும் வாதங்களை மன்றில் முன்வைத்திருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொலிஸ் பயிற்சித் திட்டங்களை நிறுத்துமாறு இங்கிலாந்த
-
இஸ்ரேலில் டெல் அவிவ் நகரில் தூதரகம் அமைக்க ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது என்று
-
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் குற்றப்புல
-
நெதர்லாந்தில் புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், இதுவ
-
தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு கல்கரி சட்ட அமுலாக்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் தனிய
-
வடக்கு அயர்லாந்தில் புதிய ஆளில்லா போர் விமானத்தை தயாரிப்பதன் மூலம் 100க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள
-
அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எதிர்வரும் 27ஆம் திகதி, நிச்சயமாக விடுதலை செய்யப்படுவ
-
மெக்ஸிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் லோபஸ்ஸுக்கு (Andres Lopez) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்ப
-
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரண
-
நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஹேஷ விதானகே ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்