ஸ்கொட்லாந்தில் கடினமான கட்டுப்பாடுகளுக்குள் செல்ல தயாராகும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்!
In இங்கிலாந்து November 20, 2020 7:49 am GMT 0 Comments 2022 by : Anojkiyan

ஸ்கொட்லாந்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாட்டின் கடினமான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
கிளாஸ்கோ உட்பட 11 சபை பகுதிகளில் 18:00 மணிக்கு நிலை நான்கு விதிகள் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பப்கள், உணவகங்கள், சிகையலங்கார நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்படும். ஆனால் பாடசாலைகள் திறந்திருக்கும். இந்த கட்டுப்பாடுகள் டிசம்பர் 11ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.
அத்துடன் பயணத் தடைகளும் நiமுறையில் இருக்கும். இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.