ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

கொடநாடு விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் இனிமேலும் கருத்துக்கள் தெரிவித்தால் அவதூறு வழக்கு விசாரணைக்கான தடை நீக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொடநாடு விவகாரம் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருவதால் அவர் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனக் கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று (வியாழக்கிழமை) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் இதனை விசாரித்த நீதிபதி மேற்படி எச்சரிக்கையை விடுத்தார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடநாடு கொலை, கொள்ளை குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். இதையடுத்து அவர் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து ஸ்டாலின் தரப்பினால் முன்வைக்கப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடைகோரிய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் கோடநாடு கொலை, கொள்ளை குறித்துப் பேசவும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இதனிடையே, ஸ்டாலின் தொர்ந்தும் கொடநாடு விவகாரம் குறித்து பேசிவருவதை தமிழக அரசு சார்பான சட்டத்தரணிகள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஏப்ரல் 7 ஆம் திகதி நடைபெறும் தி.மு.க. நடத்தும் பொதுக் கூட்டம் மற்றும் இதுவரை ஸ்டாலின் பேசிய பேச்சுகள் அடங்கிய வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணையை ஏப்ரல் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் ஸ்டாலின் கொடநாடு விவகாரம் குறித்து பேசக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.