ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் – எடப்பாடி
In இந்தியா January 7, 2021 8:22 am GMT 0 Comments 1479 by : Krushnamoorthy Dushanthini

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொய் பேசுவதில் சிறந்தவர் என நோபல் பரிசு வழங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் 2-வது நாளாக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ”திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அவதூறு கருத்து, பொய்யான முறைப்பாடு அனைத்தையும் இந்த தேர்தலில் அதிமுக முடியறிக்கும்.
ஈரோட்டில் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு 1800 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. 455 கோடி ரூபாயில் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் செயல் படுத்தபடவுள்ளது. திண்டல் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிந்தித்து பேசும் திறன் இல்லாதவர் என்றும், பொய் பேசுவதில் சிறந்தவர.; பொய் பேசுவதற்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம்.
சாயக் கழிவு நீர் பிரச்சினைகளை தீர்க்க 21 ஏக்கர் நிலம் கையகபடுத்தபட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெற்றவுடன் இதற்கு உடனடி தீர்வு காணப்படும். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.