ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை ஆரம்பம்!
In இந்தியா December 7, 2020 8:11 am GMT 0 Comments 1341 by : Krushnamoorthy Dushanthini

கொரோனா வைரஸிற்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை புனே மருத்துவமனையில் ஆரம்பமாகியுள்ளது.
கொரோனாவை தடுக்க ரஷ்ய சுகாதாரத்துறை ஸ்புட்னிக் என்ற பெயரில் தடுப்பூசியை தயாரித்துள்ளது. ‘இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது’ என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக கொண்டு செயற்படும் ‘டொக்டர் ரெட்டி லேபரேட்டரீஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ‘சிட்டி நோபிள்’ மருத்துவனையில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் 17 தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.