ஸ்பூட்னிக் வி கோவிட் தடுப்பூசி 92% பயனுள்ளதாக இருக்கும் – ரஷ்யா
In உலகம் November 11, 2020 11:37 am GMT 0 Comments 1666 by : Jeyachandran Vithushan

ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இடைக்கால சோதனை முடிவுகளின் அடிப்படையில் கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92% பயனுள்ளதாக இருக்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
குறித்த தடுப்பூசிக்கான இடைக்கால முடிவுகள் முதல் 16,000 தன்னார்வலர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் முடிவை அடிப்படையாக அடிப்படையாகக் கொண்டவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்று உலகப் பொருளாதாரத்தை முடக்கியுள்ள கொரோனா தொற்றைத் தடுக்கும் தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கான உலக நாடுகள் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
செப்டம்பர் மாதத்தில் பெரிய அளவிலான சோதனை தொடங்குவதற்கு முன்பே குறித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்த போதிலும், ரஷ்யா தனது கொரோனா தடுப்பூசியை ஒகஸ்ட் மாதத்தில் பொது பயன்பாட்டிற்காக விடப்பட்டது.
அமெரிக்காவின் பைஸர் மற்றும் ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி 90 சதவீதம் பலனளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யா இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.