ஹட்டனில் உள்ள பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா உறுதி
In இலங்கை January 27, 2021 10:56 am GMT 0 Comments 1453 by : Dhackshala

ஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்பகமுவ பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் தெரிவித்தார்.
குறித்த பாடசாலையில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கடந்த 21ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருடன் தொடர்புடைய மேலும் 11 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் இரண்டு ஆசிரியர்களும் அடங்குகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வட்டவளை, ரொசல்ல, குடாகம, ருவான்புர, ஹட்டன் தோட்டம் மற்றும் ஹெரோல் தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்பகமுவ பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.