ஹட்டன்- டிக்கோயா நகர சபை ஊழியர்கள் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்
In இலங்கை December 23, 2020 8:17 am GMT 0 Comments 1351 by : Dhackshala
கழிவகற்றல் முறைமை தொடர்பாக இடம்பெற்ற பயிற்சி செயலமர்வுக்குச் சென்ற ஹட்டன்- டிக்கோயா நகர சபை ஊழியர்கள் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.மெதவெல்ல இதனைத் தெரிவித்தார்
கண்டி நவயாலதென்னையில் மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட மாநகர சபை, நகர சபை ஊழியர்களுக்கு மேற்படி செயலமர்வு நடத்தப்பட்டது.
இந்த வதிவிட செயலமர்வில் கலந்துகொண்ட மாத்தளை மாநகர சபை ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்தே, செயலமர்வுக்குச் சென்ற ஹட்டன் – டிக்கோயா நகர சபை ஊழியர்கள் 10 பேரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதர அதிகாரி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.