ஹற்றனில் விபத்து- குழந்தை உட்பட மூவர் காயம்
In இலங்கை January 1, 2021 8:22 am GMT 0 Comments 1351 by : Yuganthini

ஹற்றன்- பொகவந்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹற்றனிலிருந்து மஸ்கெலியாவுக்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் மஸ்கெலியாவிலிருந்து ஹற்றன் நோக்கி வந்த தனியார் பேருந்து, டிக்கோயா வனராஜா பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டி, வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதியை கைதுசெய்துள்ள ஹற்றன் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.