ஹொங்கொங்கில் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள்
In உலகம் December 2, 2020 10:12 am GMT 0 Comments 1345 by : Jeyachandran Vithushan

ஹொங்கொங்கில் இன்று (புதன்கிழமை) முதல் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
குறித்த புதிய கட்டுப்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை அரசாங்க ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு பொது இடங்களில் இருவருக்கு மேல் ஒன்றுகூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவகங்களிலும் இருவர் மட்டுமே ஒன்றாக அமர்ந்துகொள்ள முடியும் என்றும் எனினும், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், அழகுப் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவை தொடர்ந்து செயற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீச்சல் குளங்களும் மற்ற பொழுதுபோக்கு இடங்களும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.