ஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு தலைவர்களுக்கு சிறைத் தண்டனை!

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கில் சட்டவிரோதமான முறையில் போராட்டம் நடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு அமைப்புகளின் தலைவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோசுவா வோங், இவான் லாம் மற்றும் ஆக்னஸ் சோவ் ஆகிய மூன்று தலைவர்களும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக நடந்து வந்த வழக்கில் அவர்கள் மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் அவர்களின் தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜோசுவா வோங்குக்கு 13 அரை மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதேபோல் ஆக்னஸ் சோவுக்கு 10 மாதங்களும், இவான் லாமுக்கு 7 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.